6 Sept 2016

கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் 150வது தினக்கொண்டாட்ட நிகழ்வு

SHARE
பொலிஸ் திணைக்களத்தின் 150வது ஆண்டு  தினக்கொண்டாட நிகழ்வுகள் நாடெங்கிலும் இன்று(03) சனிக்கிழமை இடம்பெற்றது.
இதனை சிறப்பித்து கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்திலும் தினக்கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்றது.


இதன்போது தேசிய கீதம், பொலிஸ் கீதம் போன்றன இசைக்கப்பட்டு, பொலிஸ்மா அதிபரின் 150வது நிறைவு செய்தியை நிலைய பொறுப்பதிகாரி எச்.பெர்ணாண்டோ வாசித்தார்.

மக்களுடன் சிநேகபூர்வமாக செயற்படும் வண்ணம் பிரதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராமசேவை உத்தியோகத்தர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.
தினக்கொண்டாட்டத்தின் போது கலந்து கொண்டவர்களுக்கு சிற்றூண்டிகளும் வழங்கப்பட்டது.






SHARE

Author: verified_user

0 Comments: