மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாக மேற்கொள்ப்பட்டு வருகின்ற முறையற்ற மண் அகழ்வு, முறையற்ற காட்டு மரங்கள் அழிப்பு, முறையற்ற மதுபாவனை விற்பனை, முறையற்ற விதத்தில் வாகனம் செலுத்துதல்,
முறையற்ற மீன்பிடி வலைப்பாவனை,
காணி உரிமையாளர்களின் அனுமதியின்றி காணியில் பாதுகாப்பு அரண் அமைத்தல் போன்ற நடவடிக்கை தொடர்பாகவும் ஊழல்மோசடி, கப்பம் கொடுத்தல், வாங்குதல், குழுக்களுக்கிடையே முரண்பாடு, சமூகச்சீரழிவு, நிருவாக செயற்பாட்டிற்கு தடையாக இருத்தல், நல்லாட்சிக்கு பங்கம் விளைவித்தல், இளைஞர்களை சமூக சீரழிவுகளுக்குள் உட்படுத்தல் போன்றவைகள் நடந்து செயற்பாடுகள் மட்டக்களப்பில் நடைபெற்று வருவதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பாதுகாப்பு தொடர்பாக கடந்த வாரம் மட்டக்களப்பில் நடைபெற்றது. இந்நிலையில் இவ்விடையம் தொடர்பில் அவர்
சனிக்கிழமை (27) கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்….
மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை பல்லின மக்கள், பல மதங்கள், பல கலாசார முறைகள், பன்முகத்தன்மை கொண்ட இம்மாவட்டத்தில்
76 வீதமான தமிழர்களும்
23 வீதமான முஸ்லிம்களும்,
ஒரு வீதமான சிங்களவர்களும் வாழ்கின்ற மாவட்டமாக அமைந்துள்ளது. அண்ணளவாக 1110 கிராமங்களும்
348 கிராமசேவையாளர் பிரிவும் ஏழு இலட்சம் ஏக்கர் காணிப்பரப்பளவையும் கொண்ட இம்மாவட்டத்தின் காடு, மேடு, சந்து, பொந்து எல்லா இடமும் பொலிஸ் குவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்படியான செயல்களும் இடம்பெறுகின்றமை சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
குறிப்பாக அரசியல் ரீதியாக மதுபானசாலைகளுக்கான பத்திரம் வழங்குவதை நிறுத்தி தனிப்பட்ட ரீதியாக ஒருசில பொலிஸார்கள் முறையற்ற விதத்தில் சலுகைகள் செய்வதை நிறுத்தி, ஒரு சில தவறான அரசியல்வாதிகள் ஒப்பந்தங்களுக்கு சலுகை பெறுவதற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு வருடத்திற்கு முன்பே பாதுகாப்பு கூட்டம் கூட்டுவதற்கான சூழல் இருந்தும் கடந்தவாரம் அரசியல்வாதிகளை கொண்டு பாதுகாப்பு தொடர்பான கூட்டம் கூட்டப்பட்டிருந்தமை வரவேற்கத்தக்கது.
பிரதேச ரீதியாக, கிராம ரீதியாக பொலிஸ் கூடி பல குற்றச்செயல்களை நிறுத்தி உள்ளது. இப்படி தடுத்து நிறுத்தப்பட்டாலும் ஒருசில தவறான பொலிஸாரின் செயற்பாடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இவ்வாறான செயற்பாடுகள் மாவட்டத்தில் இடம்பெறாது பாதுகாப்பது முதலமைச்சரின் கையிலேயே தங்கியுள்ளது.
எனவே முதலமைச்சர் இதனை கருத்தில் கொண்டு இச்செயற்பாடுகளை நிறுத்துவதற்கான திட்டங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.
0 Comments:
Post a Comment