13 Aug 2016

எனது கணவர் கடத்தப்பட்ட கால கட்டத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோத்தபாய ராஜபக்சவே இருந்தார் அக்கால கடத்தில் பொழும்பில் வைத்தே கடத்தப்பட்டார்.

SHARE

எனது கணவர் கடத்தப்பட்ட கால கட்டத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோத்தபாய ராஜபக்சவே இருந்தார் அக்கால கடத்தில் கொழும்பு அதியுயர் பாதுகாப்புக்கு உட்பட்டிருந்தது. எனவே எனது
கணவரை கடத்தியவர் கோத்தபாயராஜபக்சவின் ஆக்கள்தான், அங்கு விடுதலைப்புலிகளா வந்து கடத்தினர்கள் எனவே இதற்கான தீர்வினை அரசுதான் வழங்கவேண்டும் மணரச்சான்தளோ அல்லது நஸ்ரஈடோ எனக்கு தேவையில்லை என காணாமல் ஆக்கப்பட்ட  புதுக்குடியிருப்பை சேர்ந்த சந்திரலிங்கம் என்பவரின் மனைவி லலிதா தெரிவித்தார்.

நல்லிணக்க பொறிமுறைகள் பற்றி கலந்துரையாடுவதற்கான செயலணியின் அமர்வு வெள்ளிக்கிழமை (12) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கேட்ப்போர் கூடத்தில் அணியின் செயலாளர் அ.காண்டீபன் தலைமையில் நடைபெற்றது இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்….
  
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இறப்பு சான்றிதழினை நான் ஒருபோதும் எற்றுக் கொள்ளமட்டேன். அவர்கள் இறந்துள்ளார்கள் ஆயின் அவர்கள் என்ன குற்றம் செய்துள்ளனர் என்பதனை அரசாங்கம் முன்வைக்க வேண்டும். எந்தவித நஸ்ரஈடுகளை நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. எனக்கு  தேவை பறிக்கப்பட்ட உயிர்தான் இதனை விட நான் வேறு ஒன்றையும் எதிர்பார்க்கவில்லை என்னுடைய பிள்ளைக்க அப்பா என்று சொல்வதற்கு எனது கணவரை மீட்டுத்தாருங்கள்.

2008.02.20 திகதி எனது கணவர் கொழும்பில் வைத்தே  வெள்ளை வேனில் கடத்தப்பட்டார். அந்த நேரத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தவர் கோத்தபாய ராஜபக்ச அவர்கள் அதிஉயர் பாதகாப்பு வலயமாக கொழம்பு காணப்பட்டது. இக் காலகட்டத்திலையேதான் எனது கணவர் கடத்தப்பட்டிருந்தார் இவ்வாறான பாதுகாப்பு சூழ்நிலையில் விடுதலைப்புலிகளா? வந்து கடத்தினார்கள். எனவே அரசாங்கந்தான் எனது கணவரை கடத்தியது எனது கணவர் என்ன குற்றம் செய்தார் அதனை வெளிக் கொண்டவாருங்கள் அவர் எந்த விதமான குற்ற செயலிலும் ஈடுபட்டவர் அல்ல மாறாக காப்புறுதி நிறுவனம் ஒன்றிலையே கடமையாற்றி வந்தார். எவே எனது கணவர்வர் எவ்வாறு எதற்காக காணாமல் ஆக்கப்பட்டார் என்பதனை அரசாங்கம் வெளிக்காட்ட வேண்டும். எனது கணவர் அநியாயமாக கொல்லப்பட்டிருந்தால் இதனை மேற்கொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவே ஒருபோதும் நஸ்ரஈட்டையோ அல்லது மரணச்சான்றிதழையே நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவேண்டும். என அவர் இதன் போது தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: