10 Aug 2016

வாழைச்சேனை அஹமட் வித்தியாலத்துக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நிதி ஒதுக்கீடு

SHARE
 புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்..எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவு திட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து வாழைச்சேனை வை. அஹமட் வித்தியாலயத்தின்
அதிபர் காரியாலய புனரமைப்புப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 50 ஆயிரம் ரூபா நிதிக்கான பத்திரம் புதன்கிழமை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது

கொழும்பில் அமைந்துள்ள புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்..எம்.ஹிஸ்புல்லாஹ் கல்லூரி அதிபர் அல்-ஹாஜ் என்.எம்.கஸ்ஸாலியிடம் ஒதுக்கீட்டு பத்திரத்தினை வழங்கி வைத்தார். இதன் போது இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் மொஹமட் றுஸ்வின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவு திட்ட நிதி ஒதுக்கீட்டில் மதஸ்தலங்கள், கழகங்கள், அமைப்புக்கள், சமூக நிறுவனங்கள், பாடசாலை உள்ளிட்ட பொது நிறுவனங்களுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில், வாழைச்சேனை வை.

அஹமட் வித்தியாலய அதிபர் காரியாலத்தின் புனரமைப்புப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யுமாறு கல்லூரி அதிபர் விடுத்த கோரிக்கைக்கு அமையவே இந்த நிதி வழங்கப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது



SHARE

Author: verified_user

0 Comments: