18 Aug 2016

யுத்த காலத்தில் காணிகளை இழந்தவர்கள் விஷேட சட்டம் காலாவதியாவதற்குள் அதன்மூலமான நன்மைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்- மிருதினி

SHARE
யுத்த காலத்தில் காணிகளை இழந்தவர்கள் தமது காணிகளை மீட்டுக் கொள்வதற்காக உருவாக்கப்பட்ட விஷேட சட்டம் காலாவதியாவதற்குள் அதன்மூலமான நன்மைகளைப்பெற்றுக் கொள்ள வேண்டும் என இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அலுவலக பொறுப்பதிகாரியும் சட்ட ஆலோசகருமான மிருதினி சிறிஸ்குமார் தெரிவித்தார்.
யுத்தம் இடம்பெற்ற கடந்த 30 வருட காலத்தில் தமது பூர்வீக விவசாய மற்றும் குடியிருப்புக் காணிகளை இழந்த விவசாயிகள் தமது காணிகளை மீளப் பெற்றுக் கொள்வதற்கான சட்ட உதவி ஆலோசனைக் கூட்டம் ஏறாவூர் அஷ்ஹர் வித்தியாலயத்தில் புதன்கிழமை (ஒகஸ்ட் 17, 2016) இடம்பெற்றது.

இதில் மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள மட்டக்களப்பு-பதுளை வீதிப் பிரதேசத்தில் 1985 ஆம் ஆண்டிலிருந்து ஏற்பட்ட இனவன்முறைகள் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்கள், யுத்தம்
என்பனவற்றின் காரணமாக தமது பூர்வீக விவசாய மற்றும் குடியிருப்புக் காணிகளை இழந்த விவசாயிகள் கலந்து கொண்டார்கள்.

அங்கு காணியை மீளப் பெற்றுக் கொள்ளும் விஷேட சட்ட ஏற்பாடுகள் பற்றி விளக்கமளித்த சட்ட ஆலோசகர் மிருதினி தொடர்ந்து கூறியதாவது@
2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொண்டுவரப்பட்ட இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட திகதியிலிருந்து 2 வருட காலத்திற்குள் இழந்த உங்களது காணிகளை மீளப் பெற்றுக் கொள்வதற்கான வழக்கை நீதி மன்றத்தில் தாக்கல் செய்து கொள்ள வேண்டும்.

இது யுத்த சூழ்நிலையை அடிப்படையாக வைத்து பாதிக்கப்பட்டவர்களுக்காக கொண்டு வரப்பட்ட  ஒரு விஷேட ஏற்பாடுகள் சட்டம் என்பதால் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து  2 வருடங்களுக்குப் பின் செல்லுபடியற்றதாகிவிடும்.
இந்த கால விதிப்புக்குரிய விஷேட ஏற்பாடுகள் சட்டத்தின் மூலம்(Pசநளஉசipவழைn – ளுpநஉயைட Pசழஎளைழைn யுஉவ) 1983 மே மாதம் முதலாம் தி;கதியிலிருந்து நாட்டில் யுத்தம் முடிவடைந்த 2009 மே மாதம் 18 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் தமது காணிகளை இழந்தவர்கள் அக்காணிகளை மீளப் பெற்றுக் கொள்ளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

யுத்த சூழ்நிலை உங்களை உங்களுக்கு உரித்தான காணிகளிலிருந்து வெளியேற்றியிருந்தால் எந்தவிதமான தடைகளுமின்றி நீங்கள் உங்களது காணிகளை மீளப் பெற்றுக் கொள்ள இந்த சட்டமூலம் வழிவகுக்கின்றது.
நீங்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து அல்லது இடம்பெயரச் செய்;யப்பட்டு அகதிகளாகியிருந்தால் அத்தகைய சூழ்நிலைக்குள் நீங்கள் அகப்பட்டிருந்ததை எண்பிப்பதற்கான சகல ஆவணங்களையும் நீங்கள் கொண்டிருக்குட்பட்சத்தில் இந்த சட்டத்தின் மூலம் நீங்கள் உங்கள் காணிகளை மீள அடைந்து கொள்வதில் எந்தவித சிரமமும் இருக்கப் போவதில்லை.

உதாரணமாக நீங்கள் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழ்ந்திருந்தால் அதற்கான பல்வேறு ஆவணங்கள் உங்களிடம் இருக்கக் கூடும். எனவே நான் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டேன் என்பதையும் அதன் மூலமாக எனது காணியை இழந்தேன் என்பதையும் நிரூபிப்பதற்கு சிரமப்பட வேண்டியதில்லை.
இலங்கையில் 80 வீதம் அரச காணிகளும், 20 வீதம் மாத்திரமே தனியார் காணிகளும் உள்ளன. இந்த அரச காணிகளுக்கு முழுமுதல் உரித்துடையவர் அரசுதான் (யுடிளழடரவந ழுறநெச) இத்தகைய அரச காணிகளுக்கு தனியார் எவரும் உரிமை கோர முடியாது என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: