பொதுமக்களிடமிருந்து கருத்துக்களைப் பெறும் நல்லிணக்க பொறிமுறை பற்றிய கலந்தாலோசனைக்கான
செயலணியினரிடம் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து இதுவரை 654 பேர் தமது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் முன்வைத்துள்ளதாக அச்செயலணியின் மட்டக்களப்பு மாவட்ட குழுச் செயலாளர் ஏ.காண்டீபன் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை (ஓகஸ்ட் 16இ 2016) மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் கருத்துக்களைப் பெறும் 4 வது அமர்வில் 90 பேர் வருகை தந்து தமது ஆலோசனைக் கருத்துக்களைப் பதிவு செய்து கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நல்லிணக்க பொறிமுறை பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியின் அமர்வு மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை வாழைச்சேனையிலும் வெள்ளிக்கிழமை களுவாஞ்சிகுடியிலும் சனிக்கிழமை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேர்பா மண்டபத்திலும் 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வாகரைப் பிரதேச செயலகத்திலும் இடம்பெற்றது.
இதில் வாழைச்சேனையில் 278 பேரும் களுவாஞ்சிக்குடியில் 77 பேரும் மட்டக்களப்பில் 178 பேரும் தமது ஆலோசனைகள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
செயலணியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இறுதியமர்வு கொக்கட்டிச்சோலையிலுள்ள பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் வியாழக்கிழமை காலை 9.30 மணியிலிருந்து மாலை 4.00 மணிவரை இடம்பெறவுள்ளது.
0 Comments:
Post a Comment