மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வாயிற்கதவின் முன்னால் திங்கட்கிழமை
நண்பகலளவில் (ஓகஸ்ட் 15, 2016) கூடிய பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த 27 மாணவர்கள் மீதான வகுப்புத்தடையை உடனடியாக நீக்குமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான மற்றும் முகாமைத்துவபீடங்களைச் சேர்ந்த 27 மாணவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்; வகுப்புத் தடைக்கு உட்பபடுத்தப்பட்டுள்ளார்கள்.
ஆயினும், இந்த வகுப்புத் தடை நியாயமற்ற குற்றச்சாட்டுகளின் பேரில் விதிக்கப்பட்டுள்ளது எனக் கூறியே மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர்.
பல்கலைக் கழக நிர்வாகத்தினருடன் மாணவர் அமைப்பின் பிரதிநிதிகள் பல தடவைகள் கலந்துரையாடியுள்ள போதிலும் வகுப்புத் தடையை நீக்க நிருவாகம் முன்வரவில்லையென மாணவர்கள் கூறுகின்றனர்.
பல்கலைக்கழக ஒழுக்க விதிகளை மீறி சீரான நிருவாகத்திற்கு இடைஞ்சலாகவும் பல்கலைக்கழக ஒழுக்க விதிகளைப் பின்பற்றி நடக்கும் ஏனைய மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கும் இடைஞ்சலாக இருக்காத நிலைமைக்கு பல்கலைக் கழகத்தை வழிநடாத்த வேண்டும் என்பதால் தாம் குறித்த சில மாணவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க நிர்ப்பந்திக்கப்ட்டுள்ளதாக பல்கலைக் கழக நிருவாகம் தெரிவிக்கின்றது.
ஒழுங்கீனமாக நடந்;துகொண்ட மாணவர்கள் மீதான வகுப்புத் தடை அடுத்த 2 மாத காலத்தில் முடிவடையவுள்ளதாகவும் பல்கலைக்கழக நிருவாகம் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment