3 Jul 2016

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது மீண்டும் கடும் உஷ்னம் நிலவத் தொடங்கியுள்ளது.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் ஊஷ்னம் நிலவத் தொடங்கியுள்ளது. இதனால் மாவட்டத்தின் பல இடங்களில் வரட்சி நிலவத் தொடங்கியுள்ளன. கடந்த மே மாதம் பெய்த பலத்த மழைக்குப் பின்னர் தொடர்ந்து கடும் வெயிலுடன் கூடிய உஷ்னம் நிலவி வருகின்றது. 
இந்நிலையில் மட்டக்களப்பு மாட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் அமைந்துள்ள வெல்லாவெளிக்குளம், கோவில்போரதீவுக்குளம், பெரியபோரதீவு பெரியகுளம், வட்டிக்குளம் என்பன முற்றாக வற்றியுள்ளதோடு, கடுக்காமுனைக்குளம், தும்பங்கேணிக்குளம், போன்ற பெரிய குளங்களின் நீர் மட்டமும் குறைவடைந்துள்ளன.

எனினும் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகள், ஆலயங்கள், பொது இடங்கள் அடங்கலாக நாளாந்தம் 16000 லீற்றர் நீர் இலவசமாக வவுசர் மூலம், வழங்கப்பட்டு வருவதாக போரதீவுப்பற்று பிரதேச சபை தெரிவிக்கின்றது. இருந்த போதிலும், கரடியனாறு, போரதீவுப்பற்று, உள்ளிட்ட பல பிரதேசங்களில், அப்பிரதேசங்களில் அமைந்துள் பிரதேச சபைகள் மூலம், குடிநீர் வவுசர்கள் மூலம் வழங்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கா.சித்திரவேல் தெரிவித்தார்.







SHARE

Author: verified_user

0 Comments: