31 Jul 2016

மாணவர்களே உங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை நீங்கள் உரியவர்களுக்கு தெரியப்படுத்துங்கள் - பொலிஸ்; பொறுப்பதிகாரி என்.ரி.அபுபக்கர்

SHARE
மாணவப் பருவத்தில் வருகின்ற பிரச்சினைகளை இனங்கண்டு தடுத்து கொள்வதன் ஊடாகவே நீங்கள் சிறந்த கல்வியனையும், சிறந்த வாழ்க்கையினையும் எதிர்காலத்தில் மாணவர்களாகிய நீங்கள் பெற்றுக் கொள்ளமுடியும்
என களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி என்.ரி.அபுபக்கர் தெரிவித்தார்

களுவாஞ்சிகுடி பொலிசாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு  வெள்ளிகிகழமை (29) பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது இதனை ஆரம்பித்துவைத்து  உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்….

மாணவர்களே உங்களுக்கு ஏற்படும்  பிரச்சினைகளை நீங்கள் உரியவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். தற்காலத்தில் பாடசாலை மாணவர்களிடையே பலதாரப்பட்ட பிரச்சினைகள் உருவாகிய வண்ணம் உள்ளது. பிரச்சினைகள் வெளிக்கொரணப்பட வேண்டும.; அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு அது மாத்திரமின்றி பாடசாலை மாணவரகளாகிய நீங்கள் சமூகத்தில் முன்மாதிரியாக செயற்பட்டு சமூகத்தினுள் நல்ல கருத்துக்களையும், சிறந்த சிந்தனைகளையும் கொண்டு செல்பவர்களாக இருக்கவேண்டும். எனவே இந்த நாட்டினை சிறந்த நாடாக மாற்றியமைக்கின்ற தகுதியும், பொறுப்பும் உடையவர்களாக நீங்கள் இருக்கின்றீர்கள் இதனை உணர்து கொண்டு செயற்பட வேண்டும்.

அந்த வகையில் மாணவராகிய நீங்களும், உங்கள் சமூகமும் பின்வரும் விடயங்களில் மிகவும் அவதானமாக செயற்பட  வேண்டும். மதுபானப் பாவனை, போதைப்பொருள் பாவனை, புகைத்தல், பெண்களுக்கு எதிரான வன்முறை, வீதிபோக்குவரத்து விதிமுறை, வீடு,பாடசாலை சுத்தம் போன்ற விடயங்களில் நீங்கள் உங்களது கவனத்தினை செலுத்தி செயற்பட்டு உங்களுடைய எதிர்கால வாழ்க்கையை சிறம்பட அமைத்துக் கொள்வதுடன் சிறந்த சமூகம் ஒன்றை உருவாக்குவதற்கு துணையாக இருக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார். 



SHARE

Author: verified_user

0 Comments: