மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் அரையாண்டு பொலிஸ் பரிசோதனை ஏறாவூர் பொலிஸ் முன்னரங்கு
வளவில் திங்கட்கிழமை 04.07.2016 காலை இடம்பெற்றது.
மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர், கே.பி. தினேஸ் கருணானாயக பொலிஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்கொண்டதுடன் பொலிஸாரிடம் பரிசோதனைகளையும் மேற்கொண்டார்.
ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் உட்பட இன்னும் பல பொலிஸ் அதிகாரிகள் இந்த பொலிஸ் பரிசோதனை நிகழ்வுகளில் ஈடுபட்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment