5 Jul 2016

நழீமிய்யா பட்டதாரிகள் சேவை மூலம் சிவில் சமூக அமைப்பு பலமடைய வேண்டும் -அஷ்ஷெய்க் எப்.எம்.எஸ்.ஏ.அன்ஸார் மெளலானா வேண்டுகோள்.

SHARE
(டிலா )

நழீமிய்யா பட்டதாரிகள் சேவை மூலம் சிவில் சமூக அமைப்பு பலமடைய வேண்டும் என அம்பாறை மாவட்ட ராபியத்துன் நழீமிய்யீன் பழைய மாணவர் சங்கத் தலைவர் அஷ்ஷெய்க் எப்.எம்.எஸ்.ஏ.அன்ஸார் மெளலானா வேண்டுகோள் விடுத்தார்.
அம்பாறை பிராந்திய நழீமிய்யா பழைய மாணவர்களின் ஒன்றுகூடலும் வருடாந்த இப்தார் நிகழ்வும் மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் ஹோட்டலில் நடைபெற்றது.இங்கு தலைமைதாங்கி உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். 

பேருவலை ஜாமியா நழீமிய்யாப் பட்டதாரிகள் இன்று பல்வேறு உயர்தர சிவில் பதவிகளில் கடமையாற்றுகின்றார்கள் மேலும் கணிசமானோர் ஆசிரியர்களாக விரிவுரையாளர்களாக சட்டத்தரணிகளாக கடமையாற்றுவதன் வாயிலாக இன்றைய சிவில் சமூக அமைப்பின் வெற்றிடத்தை நழீமிக்களால் நிரப்ப முடியும். எனவும் தனது உரையில் தெரிவித்தார்

கணிசமானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் இப்தார் சிந்தனையை சிரேஷ்ட நளீமி அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.அமீர் நிகழ்த்தினார். நழீமிக்களின் இலக்கு, இலட்சியம், தூரநோக்கு, என்பவற்றை புரிந்து சமகால சமூகத்துக்கு தேவையான பங்களிப்புக்களை நல்க நழீமிக்கள் முன்வர வேண்டும் என இப்தார் சிந்தனையில் தெரிவித்தார்.

இப்தார் நிகழ்வை தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெற்றது. இதில்; சமூக நல்லுறவு கட்டியெழுப்பப்படல், ஒவ்வொரு ஊரிலும் தலைமைத்துவத்திற்கு பங்களிப்பு செய்தல், தத்தம் பதவி நிலைகளை உயர்த்துதல் தஃவா இயக்க முரண்பாடுகளில் சிக்காமல் நிதானமாகவும் நடுநிலையோடும் நடந்து கொள்ளல் மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் நழீமிக்கள் தத்தமது கருத்துக்களை வெளியிட்டனர். 
நன்றியுரையை அம்பாறை றாபிதா நழீமிய்யீன் செயலாளர் - கலாசார உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் ஏ.எம். தெளபீக் நிகழ்த்தினார்.

SHARE

Author: verified_user

0 Comments: