தென்னிந்திய தமிழ் நாட்டைச் சேர்ந்த சிறுகைத்தொழில் ஊக்குவிப்பு சங்கத்தின் தலைவர் எஸ். முத்துசாமி தலைமையிலான மேலதிகாரிகள் குழு செவ்வாய்க்கிழமை
(ஜுலை 19, 2016) கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமதை முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்தனர்.
மேற்படி சந்திப்பில் கிழக்கு மாகாணத்தில் கல்வியை இடை நடுவில் விட்டு வெளிநாடுகளில் பணிப்பெண்களாகவும், துப்பரவுத் தொழிலாளர்களாகவும் இருக்கும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்க கிழக்கில் கைத் தொழிற்பேட்டைகளை உருவாக்குதல் சம்மந்தமான நீண்டதொரு பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விரைவில் கிழக்கில் பாரிய கைத்தொழிற்பேட்டை ஒன்றினை உருவாக்கும் ஏற்பாடுகளை ஆரம்பிக்கவுளய்ளதாக தமிழ் நாடு சிறுகைத்தொழில் ஊக்குவிப்பு சங்க அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இச்சந்திப்பில் தமிழ் நாட்டிலிருந்து தொழிலதிபர்களான சீ. பாபு, சீ.கே. மோகன், எஸ். ரவிச்சந்திரன், கே. மாரியப்பன், வீ.எஸ். மணிமாறன், எஸ். கணேஸ், எஸ். அசோக், வீ. நடராஜன் ஆகிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். இச்சந்திப்பினை இலங்கை, இந்திய தொடர்பாளர் மணவை அசோகன் ஏற்பாடு செய்திருந்தார்.
0 Comments:
Post a Comment