(ஜெம்சாத் இக்பால்)
துளை மாவட்டத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான உயிரோட்டத்துடன் பல்லூடகச் செயலமர்வுக் கருத்தரங்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வழிகாட்டலில் கட்சியின் உயர்பீட உறுப்பினரும்,
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் இணைப்பாளருமான பீ.தாஜுதீன் தலைமையில் பதுளை வை.எம்.எம்.ஏ மண்டபத்தில் சனிக்கிழமை (16) காலை நடைபெற்றது.
இதில் பதுளை மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பலர் பங்குபற்றினர். எதிர்வரும் காலங்களில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சைகளை எழுதவிருக்கும் மாணவர்களுக்கான செயலமர்வுகளும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இத்தகைய இலவச கருத்தரங்குகளின் மூலம் தமிழ், முஸ்லிம் மாணவர்களின் கல்வி தரத்தை அதிகரிப்பதுடன், சிறந்த பெறுபேறுகளையும் பதுளை மாவட்டம் பெற்றுக்கொள்ள ஏதுவாக அமையும்.
இதற்கானஇடவசதிகளை பதுளை வை.எம்.எம்.ஏ இலவசமாக வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment