22 Jul 2016

விளையாட்டின் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் கிழக்கு மாகாண இளைஞர்களது பிரச்சினைக்கு தீர்வு அவசியம் நாடாளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு

SHARE
விளையாட்டுத்துறையின் மூலம் நாட்டில் இனங்களுக்கிடையில் ஒற்றுமை- நல்லிணக்கம் - புரிந்துணர்வை ஏற்படுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் வேலைத்திட்டங்களை வரவேற்பதாக தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற
இராஜாங்க அமைச்சர் எம்.எல்..எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண இளைஞர்கள் விளையாட்டுத்துறை சார்ந்த ஏராளமான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றதுடன் அவற்றுக்குத் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற விளையாட்டுத்துறை தொடர்பான விசேட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

விளையாட்டுத்துறையின் ஊடாக நாட்டில் நல்லிணக்கத்தையும், இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை ஏற்படுத்தவும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் புரிந்துணர்வை ஏற்படுத்தவும்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் முன்னெடுத்து வரும் திட்டங்களை நாங்கள் வரவேற்கின்றோம் - பாராட்டுகின்றோம்.

வடகிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம், சிங்கள இளைஞர் -யுவதிகளிடையே ஒற்றுமைபுரிந்துணர்வை ஏற்படுத்த விளையாட்டுத்துறை முக்கிய பங்கு வகிக்கின்றது. எனினும், இப்பகுதிகளில் வாழ்கின்ற இளைஞர் - யுவதிகள் ஏராளமான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அவற்றுள் விளையாட்டுத்துறை சார்ந்த பிரச்சினைகளும் மிக முக்கியமானதாகும். ஆகவே, அப்பகுத்pயில் உள்ள விளையாட்டுத்துறைசார் பிரச்சினைகளை தீர்த்து வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

வடகிழக்கு பகுதிகளில் பல விளையாட்டுக் கழகங்கள் இருந்த போதிலும் அவற்றுக்கு போதியளவு விளையாட்டு உபகரணங்கள் இல்லாத நிலைக்காணப்படுகின்றது. விசேடமாக யுத்ததினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்கின்ற இளைஞர் யுவதிகள் இப்பிரச்சினைக்கு அதிகம் முகம்கொடுக்கின்றனர்

வடகிழக்கு மாகாணத்தில் போதியளவுதரமான விளையாட்டு மைதானங்கள் இல்லாது காணப்படுகின்றது. இருக்கின்ற மைதானங்கள் போதியளவு வசதி கொண்டதாக இல்லை. எனவே, ஒவ்வொரு பிரதேச செயலகத்தின் கீழ் ஒரு பொது விளையாட்டு மைதானம் அமைக்கப்பட வேணடும். அது நவீன வசதிகளுடன் கூடியதாகவும் அமைய வேண்டும் என அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றேன.

மட்டக்களப்பு பொது மைதானம் புனரமைக்கப்பட்டு அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது. அதேபோன்று, காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானம் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் தற்போது அது இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளது. இம்மைதானத்தை முழுமையாக பூர்த்தி செய்து கொடுக்க விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்

யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வவுனத்தீவு பகுதிக்கு அண்மையில் நான் விஜயம் செய்திருந்தேன். இப்பகுதியிலேயே யுத்ததினால் பாதிக்கப்பட்ட அதிகமான இளைஞர் - யுவதிகள் வாழ்கின்றனர். எனினும், இங்கு விளையாட்டு மைதானம் இல்லாமையானது அவர்களுக்கு பெரிதும் பாதிப்பாக அமைந்துள்ளது. எனவே, நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானமொன்றை இப்பகுதியில் அமைத்துக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படுமாயின் மைதானம் அமைப்பதற்கு தேவையான காணியைப் பெற்றுக் கொடுக்க அப்பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து நடவடிக்கை எடுப்போம்.

பல்வேறுபட்ட சக்திகள் இனங்களுக்கிடையிலும் - மதங்களுக்கிடையிலும் முறுகள் நிலையை ஏற்படுத்துவதற்கும் சமூகங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்துவதற்கும் திட்டமிட்டு செயற்படுகின்றன. இவ்வாறான சூழலிளே இனங்களுக்கிடையில் குறிப்பாக இளைஞர்களுக்கிடையில் புரிந்துணர்வையும் - ஒற்றுமையும் ஏற்படுத்துவதற்கு மிக முக்கிய சக்தியாக இருப்பது விளையாட்டாகும். ஆகவே, அந்த ஒற்றுமையையும் - புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கு இந்த விளையாட்டுத்துறையை நாம் முன்னேற்ற வேண்டும். அதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கவும் வேண்டும். – என்றார்



SHARE

Author: verified_user

0 Comments: