வரலாற்றுப் புகழ் மிக்க மட்டக்களப்பு களுதாவளை அருள் மிகு திருநீற்றுக்கேணி சிவசக்தி ஸ்ரீ முருகன் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்ட பக்ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்றது.
கடந்த 13 ஆம் திகதி கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு 15 ஆம், 16 ஆம் திகதிகளில் எண்ணைக்காப்புச் சாத்தும் நிகழ்வு இடம்பெற்று, வெள்ளிக்கிழமை காலை மஹா கும்பாபிஷேகம் இடம்பெற்றது.
களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய முன்னாள் பிரதம குரு சிவ ஸ்ரீ சோ.சந்திரசேகரக் குருக்களின் அருளாசியுடன், களுதாவளை திருநீற்றுக்கேணி சிவசக்தி ஸ்ரீ முருகன் ஆலய பிரதம சிவாச்சாரியார் கிரியாஜோதி சிவ ஸ்ரீ வே.கு.சபாநாயகம் குருக்கள், களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய பிரதம குரு கிரியா கலாபமணி சிவ ஸ்ரீ சு.கு.விநாயகமூர்த்தி குருக்கள், மாவேற்குடா பிள்ளையார் ஆலய பிரதம குரு சாதகசிரோண்மணி சிவ ஸ்ரீ தெ.கு.ஜனேந்திரராஜா குருக்கள் ஆகியோர் உள்ளிட்ட மதகுருமர்கள் தலைமையில் கிரியைகள், நடைபெற்று சுவாமி உள்வீதி வெளி வலம்வந்தது.
பின்னர் மூல மூர்தியாகிய முருகப்பெருமான், வள்ளி தெய்வயானைக்கும், ஏனைய பரிபாரத் தெய்வங்களுக்கும், மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றன.
0 Comments:
Post a Comment