மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் வியாழக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட பாரிய தீவிபத்தில் மர அரிவு ஆலையொன்றும், அதனருகே இருந்த வீடும் அதிக சேதத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆரையம்பதி, செங்குந்தர் வீதியில் உள்ள மர ஆலையும் வீடுமே தீயினால் சேதமடைந்துள்ளது.
மர அரிவு ஆலையும் வீடும் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதால் பாரியளவில் பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்தில் ஆட்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
ஸ்தலத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர் பொலிஸார் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment