மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பிரதேச மாணவி ஒருவர் மீது பாலியல் சேஷ்டை புரிந்த குற்றச்சாட்டில் காத்தான்குடி பிரதேச இளைஞர் ஒருவர் கைது செய்யப்ப
ட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
வியாழக்கிழமை 02.06.2016 மாலை வேளையில் பிரத்தியேக வகுப்புக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த குறித்த மாணவியை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த இளைஞன் மாணவியின் பின்புறமாக தட்டியுள்ளார்.
இதனால் அச்சமுற்ற அந்த மாணவி அவ்விடத்தில் கூக்குரல் எழுப்பியுள்ளார். இச் சம்பவத்தை அப்பகுதியில் இருந்தவர்களும் கண்டுள்ளனர்.
இதனையடுத்து உடனடியாக சம்பந்தப்பட்ட இளைஞரை துரத்திப் பிடித்து காத்தான்குடி பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து அவரை இம்மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரைணகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment