28 May 2016

இலவச கருத்தரங்குகள்

SHARE
(க.விஜி) 

மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகமும்,மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக அதிபர் சங்கமும் கூட்டாக இணைந்து .பொ..(.) மாணவர்களின் நன்மை கருதி இலவச கருத்தரங்குகள் நடாத்தி வருகின்றார்கள்.
வலயக்கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன்    வழிகாட்டல்களினதும், ஆலோசனைக்கு அமைவாகவும் , இலவச கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றது ஏழு நிலையங்களாக தரம்பிரிக்கப்பட்டு கடந்த திங்கட்கிழமை முதல் -வெள்ளிக்கிழமை வரையும் (23-27 .5.2016) கலை, வர்த்தகம், கணிதம், விஞ்ஞானம், பிரிவைச்சேர்ந்த இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் (2016 ஆகஸ்ட்) மாணவர்களுக்கு நன்மை கருதியே இலவசக்கருந்தரங்கு  நடைபெற்று வருகின்றதாக வலயக்கல்வி அலுவகத்தின் உதவிக்கல்விப்பணிப்பாளர் பொன்.வன்னியசிங்கம் தெரிவித்தார்.

புவியியல் பாடத்திற்கான செயலமர்வு வின்சன்ட் உயர்தரப் பாடசாலையில் உதவிக்கல்விபணிப்பாளர் பொன்.வன்னியசிங்கம் தலைமையில் வியாழக்கிழமை (26.5.2016)காலை 9.45.நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன், கிழக்கு பல்கலைக்கழக புவியல்துறை விரிவுரையாளர் கிருபா இராஜரெத்தினம், வின்சன்ட் உயர்தரபாடசாலையின் அதிபர் திருமதி.இராஜகுமாரி கனகசிங்கம் ,புவியியல் பாடஆசிரியர்களான கே.உதயகுமார், எஸ்.சந்திரகலா, உட்பட மெதடிஸ்த மத்தியகல்லூரி, வின்சன்ட் உயர்தரபாடசாலை,புனித மிக்கல் கல்லூரி, சிசிலியா பெண்கள் பாடசாலை, இந்துக் கல்லூரி, மகாஜனக் கல்லூரி, கல்லடி விவேகானந்தா மகளிர் பாடசாலை, கல்லடி சிவானந்தா தேசியபாடசாலை, ஆகிய பாடசாலையைச் சேர்ந்த 200 மாணவர்கள் செயலமர்வில்  கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு வலயத்தில் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களை அதிகரிக்க செய்தல், பாடரீதியாக சித்திவீதத்தை அதிகரிக்கச் செய்தல் என்பதுதான் இச்செயலமர்வின் நோக்கமென வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் தெரிவித்தார்.












SHARE

Author: verified_user

0 Comments: