சர்வதேச உதைப்பந்தாட்டப் போட்டியொன்றுக்காக தென்கொரியா செல்லவுள்ள 19 வயதிற்குக் கீழ்ப்பட்டோருக்கான இலங்கை
தேசிய உதைப்பந்தாட்ட அணியில் ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரி மாணவன் எஸ்.ஏ. ஆதில் இடம்பிடித்துள்ளார்.
மே மாதம் 18 ஆம் திகதி தென்கொரியாவில் சர்வதேச உதைப்பந்தாட்டப் போட்டி இடம்பெறவுள்ளது.
தென்கொரியா செல்லவுள்ள ஆதில் என்ற உதைப்பந்தாட்ட வீரரைக் கௌரவித்து அந்நாட்டுக்;குச் சென்று திரும்புவதற்கான செலவை ஈடுசெய்யும் பணப்பரிசு வழங்கும் நிகழ்வு அலிகார் தேசியக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை 04.05.2015 இடம்பெற்றது.
இளந்தாரகை விளையாட்டுக் கழக அனுசரணையுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா, மட்டக்களப்பு மாவட்ட உதைப்பந்தாட்ட சங்கத் தலைவரும் மட்டக்களப்பு மாநகர ஆணையாளருமான எம். உதயகுமார், அலிகார் தேசியக் கல்லூரியின் உடற்கல்விப் போதனாசிரியர் ஏ.எம்.எம். ஜிப்ரி, ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.சி.எம். ஷயீட், இளந்தாரகை விளையாட்டுக் கழகம் மற்றும் மாவட்ட தெரிவு செய்யப்பட்ட சம்பியன் அணி விளையாட்டு வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment