24 Apr 2016

பஸ்தரிப்பு நிலைய அமைவிடத்தின் பெயரினை மாற்றும் உரிமை எனக்குகிடையாது

SHARE

களுவாஞ்சிகுடி பஸ்தரிப்பு நிலையம் என்பது காலாகலமாக இருந்து வருகின்ற ஒன்றாகும். இந்நிலையில் தற்போதைய பஸ்தரிப்பு நிலையத்தில் தங்களது கிராமத்தின் பெயரினையும் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை பட்டிருப்பு கிராம மக்கள் முன்வைத்திருந்தனர்.
இதன் பின்னர் இது குறித்து களுவாஞ்சிகுடி கிராம மக்களையும் அழைத்து இணக்கப்பாட்டினை ஏற்படுத்தும் முகமாக உரையாடிய போது, எவரும் இதற்கு இணக்கப்பாட்டிற்கு வரவில்லை.

 இதன்பின்னர் பட்டிருப்பு மக்கள் இந்த விடத்தில் என்னில் நம்பிக்கையீனம் காரணமாக  அரசாங்க அதிபரிடம் சென்று தங்களது கோரிக்கையினை முன்வைத்து பேச்சிவார்த்தையிலும் ஈடுபட்டனர். இதன் விளைவாக பட்டிருப்பு சித்திவிநாயகர் பாலர் பாடசாலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட அரசாங்க அதிபர்,  குறித்த பஸ்தரிப்பு நிலையம் சம்பந்தமான பிரச்சினையில் எந்தவொரு அதிகாரிகளும் தலையிடத் தேவையில்லை எனவும் இது சம்பந்தமான பிரச்சினைகள், சந்தேகங்களை மாவட்ட செயலகத்தின் ஊடாக தீர்த்துக் கொள்ளலாம் எனவும் பட்டிருப்பு களுவாஞ்சிகுடி என்ற பெயரினை கொண்டதாகவே திறக்கப்படும் என்ற  உறுதிமொழியினை  நான் உட்பட அமைச்சர், ஏனைய அதிகாரிகள் இருக்கத்தக்கதாக வழங்கியிருந்தார். பின்னர் மேலதிகாரியின் கட்டளைக்கு அமைவாக  இந்த விடயத்தில் எனது தலையீட்டை நீக்கிக் கொண்டேன்.

   இதன் பின்னர் தற்போது பஸ்தரிப்பு நிலையமானது திறக்கப்பட்டுள்ளது. இனிவருங்காலங்களில் இதன் பெயரினை மாற்றும் உரிமை எனக்கு இல்லை இதனை போக்குவரத்து அதிகார சபையே மேற்கொள்ள வேண்டும் நிலமை இவ்வாறு இருக்க என்மீது பட்டிருப்பு மக்கள் குற்றம் சுமத்துவது மனவேதனையை உண்டுபண்ணுவதாக அமைகின்றது என தெரிவித்தார்

SHARE

Author: verified_user

2 Comments:

Vanchi Vizigal said...

News போட்ட நீர் எங்ஙப்பா இருக்கா

Vanchi Vizigal said...

News போட்ட நீர் எங்ஙப்பா இருக்கா