இலங்கை சமூக ஊடகத்துறை வரலாற்றில் பேஸ்புக் பயனர்கள் முதன்முறையாக ஒழுங்கமைக்கும் ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் 24ஆம் திகதி காலை 10 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை பம்பலப்பிட்டியவில் உள்ள AVS மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
'பேஸ்புக் தமிழா 2016' என்ற பெயரில் இடம்பெறவுள்ள இந்த ஒன்று கூடலில் நாடு முழுவதும் உள்ள முகம் காணாத முகப்புத்தக நண்பர்களை ஓரிடத்தில் ஒன்று கூட்டி அவர்களுக்கிடையில் நேரடி அறிமுகங்களை உருவாக்குவதே நோக்கமாகும்.
பேஸ்புக் நண்பர்களினால் திறம்பட ஒழுங்கமைக்கப்படும் இந்த ஒன்றுகூடலில், நகைச்சுவை பட்டிமன்றம், மெல்லிசை பாடல்கள், தனி நபர் திறமை வெளிக்காட்டல்கள் மற்றும் விறுவிறுப்பான பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறவிருக்கின்றன.
இந்த நிகழ்வுக்கு நாடு முழுவதும் இருந்து சுமார் 200-300 தமிழ் பேஸ்புக் பயனர்கள் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கின்ற அதேவேளை, சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இந்த நிகழ்வுக்கு தமிழ் பேஸ்புக் பயனர்கள் அனைவரையும் அன்புடன் அழைப்பதாக ஏற்பாட்டு குழு கோரிக்கை விடுத்துள்ளது.
0 Comments:
Post a Comment