கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் 1143 ஆசிரியர்களுக்கான 3 மாதக் கொடுப்பனவு வியாழக் கிழமை (28) மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தின் தவிசாளர். பொன்.செல்வநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, பிரதித் தவிசாளர் இ.பிரசன்னா, மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கோ.கருணாகரம், இரா.துரைரெத்தினம், ஞா.கிருஷ்ணபிள்ளை, மா.நடராசா, ஷிப்லி பாறுக் உட்பட கல்வி அதிகாரிகள், முன்பள்ளி ஆசிரியைகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
ஒவ்வொரு ஆசிரியையும் கடந்த ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதக் கொடுப்பனவாக சேர்த்து 9000 ஆயிரம் ரூபாவுக்கான காசோலை இதன்போது வளங்கப்பட்டன. மொத்தமாக ஒரு கோடியே 28 இலட்சம் ரூபாய் நிதி கிழக்கு மாகாண முன் பள்ளி பணியகத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடடை புரிகின்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப் பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment