12 Mar 2016

நீண்ட நேரம் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தவாறே இளைஞன் சாய்ந்து மரணம்

SHARE
படுத்தவாறே நீண்ட நேரம் கைப்பேசியில் உரையாடிக் கொண்டிருந்த இளைஞன் இறந்து விட்ட சம்பவம் பற்றி தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவு ஹிஸ்புல்லாஹ் நகர் - மிச்நகர் கிராமத்தைச் சேர்ந்த அப்துல் மலிக் பௌமி (வயது 18) என்பவரே இவ்வாறு இறந்துள்ளார்.
சனிக்கிழமை 12.03.2016 பகல் இடம்பெற்றுள்ள இச்சம்பவம் பற்றி மேலும், தெரியவருவதாவது,  இந்த இளைஞன் கட்டிலில் சாய்ந்தவாறு நீண்ட நேரமாக கைப்Nசியில் உரையாடிக் கொண்டிருந்துள்ளார். பின்னர் சற்று நேரத்துக்கெல்லாம் குறித்த இளைஞன் அசைவற்று படுத்துக் கிடந்துள்ளார்.
இதனை அவதானித்த உறவினர்கள் அவரை தட்டி எழுப்பியபோது அவரது உயிர் ஏற்கெனவே பிரிந்து விட்டிருந்ததாக பொலிஸ் வாக்கு மூலத்தில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர் ஒரு இருதய நோயாளி என்று பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார். பொலிஸார் இச்சம்பவம் பற்றி மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


SHARE

Author: verified_user

0 Comments: