24 Mar 2016

மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ நீர்முக விநாயகர் மஹா கும்பாபிஷேக பெரும் சாந்தி பெருவிழா

SHARE
மட்டக்களப்பு வந்தாறுமூலை அருள்மிகு ஸ்ரீ நீர்முக விநாயகர் ஆலய புனராவர்தன அஷ்டபந்தன பஞ்சகுண்ட பஷ-பிரதிஷ்ட மஹா கும்பாபிஷேக பெரும் சாந்தி பெருவிழா எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகி ஏப்ரல் 03 ஆம்திகதி கும்பாபிசேகம் இடம் பெறவுள்ளது.
இந்துமஹா சமுத்திரத்தின் மத்தியில் முத்தெனத் திகழும் இலங்கை திருநாட்டில் சைவமும் தமிழும் தழைத்தோங்கி வயல் நிலங்களையும் நீர்வளங்களும் சமுத்திரமும் சூழ அழகுறு கிழக்கு இலங்கையில் ஸ்ரீ கண்ணகி அம்பாள் வந்தேறிச் சென்ற சிறப்பு இதிகாச புராண கிராமமாம் வந்தாறுமூலை எனும் புண்ணிய பூமியதில் வருவோர் வினைகளைந்து அருள் சுருக்கும் ஸ்ரீ நீர்முக விநாயகர் பெருமானுக்கும் பரிவாரமூர்த்திகளுக்கும் ஏப்ரல் 03 ஆம் திகதி காலை 8.40 மணி முதல் 9.45 மணிவரை வரும் ரிசப லக்ன சுபமுகூர்த்த வேளையில் மஹா கும்பாபிஷேகம் நடைபெறும்.

விழாக்கிரியைகள் இம் மாதம் 30ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகி எண்ணைக் காப்பு சாத்தும் நிகழ்வுகள் ஏப்ரல் முதலாம் திகதியும், 2 ஆம் திகதியும் நடைபெறுகின்றன.  அத்தோடு 36 நாட்கள் மண்டலாபிஷேக பூசைகள் நடைபெறும்.

விழாக்காலங்களில் பக்த அடியார்கள் இந்துமத விழுமியங்களுக்கு அமைவாக உடையணிந்து விழாக்கால வழிபாடுகளிலும் கலந்து  நீர்முக விநாயகர் அருள் பெறுமாறு ஆலய நிர்வாக சபையும், வந்தாறுமூலை வாழ் பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: