8 Mar 2016

கெக்கிராவை வாய்க்காலிலிருந்து ஏறாவூர் விவசாயியின் சடலம் மீட்பு

SHARE
மாத்தளை மாவட்டம் கெக்கிராவையில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த ஏறாவூர் வாசியொருவர் வாய்க்காலில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக கெக்கிராவ பொலிஸார் திங்களன்று 07.03.2016 தெரிவித்தனர்.
ஏறாவூர், பள்ளியடி வீதியில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஆதம்பாவா அலியார் (வயது 49) என்பவரே வாய்க்கால் நீரில் மூழ்கி மரணித்தவராகும்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, இவர் கெக்கிராவையில் உள்ள மரக்கறித் தோட்ட மொன்றில் வேலை முடிந்து தொழுகையை நிறைவேற்றுவதற்காக அங்குள்ள வாய்க்கால் நீரில் கைகால் முகம்; கழுவுவதற்காகச் சென்று வாய்க்கால் கரையில் கால் வைத்தபோது வழுக்கி வாய்க்கால் நீரில் மூழ்கியுள்ளார்.

வாய்க்காலுக்குச் சென்றவரை நெடுநேரமாகியும் காணவில்லை என்று அறிந்த அங்கிருந்த அவரது நண்பர்கள் தேட ஆரம்பித்துள்ளனர்.
அப்போது அவரது கைப்பை நீரில் மிதந்து காணப்பட்டுள்ளது.
அதனைக் கொண்டு அந்த இடத்தில் தேடிய போது அவர்  நீரில் அமிழ்ந்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் பின்னர் சடலம் கெக்கிராவையிலிருந்து ஏறாவூருக்குக் கொண்டு வரப்பட்டு திங்கட்கிழமை இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது.

SHARE

Author: verified_user

0 Comments: