26 Mar 2016

நாளை உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர் சுவாமி விபுலானந்தரின் 124 வது ஜனனதினம்!

SHARE
(வி.ரி சகா)

உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 124வது ஜனன தினம் நாளை 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாகும்.

தமிழுக்கும் சைவத்திற்கும் அணிசேர்த்த .கி.மிசன் துறவியான வித்தகன் விபுலானந்த அடிகள் கிழக்கிலங்கையிலுள்ள காரைதீவில் 27.03.1892 இல் அவதரித்தார்.

அவரது 124வது ஜனனதினத்தையொட்டி இலங்கையிலும் உலகெங்கிலுமுள்ள தமிழர்கள்வாழும் பிரதேசங்களிலும் ஞாபகார்த்தநிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இலங்கையின் பலபாகங்களிலும் சுவாமியின் 124வது ஜனனதினத்iயொட்டிய நிகழ்வுகள் நடாத்த அவர்சார்ந்த அமைப்புகள் ஏற்பாடுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளன.
பிறந்த மண்ணில்..

சுவாமிகள் பிறந்த காரைதீவு மண்ணில் காரைதீவு சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த பணிமன்றத்தினர் நாளை அவர்பிறந்த மனையில் பெருவிழாவை நடாத்தவுள்ளது.
பணிமன்றத்தலைவர் வெ.ஜெயநாதன் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் சுவாமியின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்தலுடன் சுவாமிபிறந்த வீட்டில் விசேட ஆராதனை வழிபாடு பூஜை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென மன்றச்செயலாளர் எஸ்.தங்கவேல் தெரிவித்தார்.

இறுதியாக விபுலானந்த மணி மண்டபத்தில் விசேட நினைவுதினக்கூட்டமும் நடைபெறவுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை சைவமும் தமிழும் பரிசளிப்பு விழா!

காரைதீவு விளையாட்டுகழகமானது வருடாந்தம் நடாத்தும் சைவமும் விபுலாந்தர் அவர்களின் ஜனன தின தமிழும் நிகழ்வின் ஓரங்கமான கட்டுரைப்போட்டிகள் விபுலாநந்த மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. காரைதீவு பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு 4 வயது பிரிவு அடிப்படையில் இவ் கட்டுரைபோட்டியானது இடம்பெற்றது.

சைவமும் தமிழும் நிகழ்வின் நிகழ்வான விவாதப் போட்டி மற்றும் அனைத்துபோட்டிகளுக்குமான பரிசளிப்பு நிகழ்வும் ஞாயிறன்று சுவாமி விபுலாந்தர் அவர்களின் 124 ஜனன தினமன்று கழக தலைமையகத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கனடா விபுலானந்தர் மன்றத்தினர் நாளை அங்கு பெருவிழாக்கொண்டாடத் திட்டமிட்டுள்ளதாக அதன் காப்பாளர் பேராசிரியர் கலாநிதி .பாலசுந்தரம் தெரிவித்தார்.
அதேபோன்று லண்டன் அவுஸ்திரேலியா பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் இவ்வாறு பெருவிழாக்களை நடாத்த ஏற்பாடுசெய்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சித்ராபௌர்ணமியில் பிறந்தமண்ணில் திருவுருவச்சிலை!
சுவாமி துறவறம்பூண்ட சித்ராபௌர்ணமி தினமான காரைதீவு பிரதானவீதியிலுள்ள முச்சந்தியில் (விபுலானந்த சதுக்கத்தில்)  மகரயாழ் சுற்றுவேலி மற்றும் கலாசார பாரம்பரியத்துடனான கோபுரத்திற்கு மத்தியில் தமிழர் பாரம்பரியத்துடன் நிருமாணிக்கப்பட்டுள்ள அழகிய திருவுருவச்சிலையை  திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சுவாமி விபுலானந்த அடிகளார் 27.03.1892 இல் பிறந்த காரைதீவில் முதன்முதலாக 08.10.1969 இல் இந்தியாவின் தவத்திருகுன்றக்குடி அடிகளாரால் முதலாவது நின்ற திருவுருவச்சிலை திறந்துவைக்கப்பட்டது.

அது பிரதான வீதியலமைந்திருந்த விபுலானந்த பொதுநூலக முன்றலில் நிறுவப்பட்டது. பின்னர் அது 1990இல் ஏற்பட்ட அசாதாரணவன்முறையில் தகர்க்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டதுடன் இன்று அவ்விடத்தில் அது இருந்ததற்கான தடயம் கூட இல்லை.

பின்னர் இரண்டாவது நின்ற திருவுருவச்சிலை சுவாமி விபுலானந்தர் பிறந்த வீட்டுச்சூழலில் அதாவது மணிமண்டபத்தின்முன்றலில் 26.06.1999 இல் இலங்கை .கி.மி.தலைவர் சுவாமி ஸ்ரீமத் ஆத்மகனானந்தாஜீனால் திறந்துவைக்கப்பட்டது.
இவ் இரண்டு அழகான சிலைகளையும் 1967இல் உருவாக்கப்பட்ட சுவாமி விபுலானந்; ஞாபகார்த்த பணிமன்றத்தின் ஏற்பாட்டில்  வடிவமைத்தவர் சிற்பி புல்லுமலை நல்லரெத்தினமாவார்.


இதைவிட விபுலானந்த மத்தியகல்லூரியில் நின்ற சிலையொன்று அமையப்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: