1 Feb 2016

கல்முனையில் வெற்றிகரமாக நிறைவுபெற்ற தேசிய விளையாட்டுவார இறுதிநாள் நிகழ்வு.

SHARE
தேசிய விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கி வாரத்தை முன்னிட்டு கல்முனை, கல்முனை-தமிழ், சாய்ந்தமருது ஆகிய பிரதேசசெயலகங்கள் கூட்டாக இணைந்து ஏற்பாடு செய்த இறுதிநாள் நிகழ்வு கல்முனை ஐக்கிய சந்தாங்கேணி மைதானத்தில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் (30.01.2016) நடைபெற்றது.
காலை 7.30 மணிக்கு கல்முனை பிரதான வீதி வழியாக அலுவலக உத்தியோகத்தர்களின் நடைபாதையுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. அதனை தொடந்து மைதானத்தில் ஒன்றுதிரண்ட உத்தியோகத்தர்கள், இளைஞர் விளையாட்டுக்கழகங்களின் உடற்பயிற்ச்சி இடம்பெற்றது. திறந்த போட்டியாக ஆண்களுக்கான மரதன் ஓட்டம் நடைபெற்றதுடன் திணைக்களங்களுக்கிடையிலான 11 பேர் மட்டுப்படுத்தப்பட்ட 05 ஓவர் மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி நடைபெற்றது. இச் சுற்றுப் போட்டியில் கல்முனை பிரதேசசெயலகம் சம்பியன் கிண்ணத்தை சுவிகரித்தது.
பிற்பகல் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான 100 மீற்றர், 40 வயதுக்கு கீழ்ப் பட்டவர்களுக்கான 200 மீற்றர், அஞ்சல் ஓட்டம், உதைபந்தாட்டப் போட்டி, கராத்தே சோ என பல போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இறுதியில் மாலை நேரம் வெற்றிபெற்றவர்களுக்கான கேடயங்கள், சான்றிதழ்கள், பரிசுகள் என்பன அதிதிகளால் வழங்கி கௌரவிக்கப்பட்டன. நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், பொலிஸ் அத்தியட்சகர், வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.ஜெலீல், கல்முனை பிரதேசசெயலாளர் எம்.எச்.முகம்மட் கனி, கல்முனை தமிழ் பிரிவு பிரதேசசெயலாளர் கே.லவநாதன், சாய்ந்தமருது பிரதேசசெயலாளர் ஏ.எல்.சலீம் மாநகரசபை உறுப்பினர்கள் திணைக்களத் தலைவர்கள், விளையாட்டு அதிகாரிகள் எனப் பலரும்; கலந்து கொண்டனர்.











SHARE

Author: verified_user

0 Comments: