29 Feb 2016

19 வயது குடும்பப் பெண் மீது கட்டுத் துப்பாக்கிச் சூடு படுகாயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள வாகநேரிப் பகுதியில் இடம்பெற்ற கட்டுத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 19 வயதான குடும்பப் பெண்ணொருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் 25 ஆம் வார்ட்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் இப்பெண்ணுக்கு காலில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயம் தற்சமயம் குணமடைந்து வருவதாக திங்களன்று 29.02.2016 மட்டக்களப்பு வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

சனிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் வாகநேரியைச் சேர்ந்த என். றேணுகா என்பவரே காயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பதுபற்றி வாழைச்சேனைப் பொலிஸாரும் புலனாய்வுப் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: