ஊடகவியலாளர்கள் மக்களின் நன்மைகளுக்காக பல இன்னல்களை எதிர் கொண்டு செயற்பட்டு வருகின்றார்கள். இந்நிலையில் ஊடகவியலாளர்களோடு இணைந்து சிவில் சமூகத்தவர்களும், இணைந்து செயற்பட்டால் மக்களின் பிரச்சனைகளை மென்மேலும் வெளிக் கொணர்வதற்கும், ஏனைய இதர செயற்டுகளுக்கும் உந்துசக்தியாக அமையும்.
என உடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் தர்மசிறி லங்காபேலி தெரிவித்துள்ளார்
அரச சார்பற்ற அமைப்புக்களின் செயற்பாடுகளையும், ஊடகவியலாளர்களுக் கிடையே ஒத்துழைப்பையும், புரிந்துணைர்வையும், உருவாக்கும் நோக்குடன் திங்கட் கிழமை (25) மட்டக்களப்பு ஈஸ்ட் லகூண் ஹொட்டலில் நடைபெற்ற செலமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…
தகவலை அறிவதற்கான சட்டவரைவு தொடர்பாக மக்களைத் தெழிவு படுத்தும் செயற்றிட்டம், காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை போன்ற பகுதிகளிலும், கிளிநொச்சி, போன்ற இடங்களிலும் இடம்பெற்றுள்ளது. மேலும் இவ்வாறான கலந்துரையாடல் மத்திய மாகாணம், மற்றும் கிழக்கு மாகாணத்திலும் எதிர் காலத்தில் மேற்கொள்ளவிருக்கின்றது.
மக்களின் பிரச்சனைகளை வெளிக்கொணர்வதில் ஊடகவியலாளர்களுக்கு, சமூகத்தில் விசேடமான பொறுப்பு உள்ளது. இந்நிலையில் ஊடகவியலாளர்கள் அவர்களது பொதுப்புகளை செய்வதில் பின்னிற்கக்கூடாது.
வடக்கு கிழக்கு மாகாணத்திலுள்ள மக்கள் ஊடகவியலாளர்களிடமிருந்து பல விடையங்களை எதிர் பார்க்கின்றார்கள், மக்களிடம் பல விடையங்கள் மறைந்து காணப்படுகின்றன. அவ்வாறான விடையங்கைள ஊடகவியலாளர்கள் வெளிக்கொணர வேண்டும்.
யுத்தகாலத்தில் மக்கள் மத்தியில் கடமையாற்றிய அரச சார்ப்பற்ற அமைப்புக்களை அப்போதிருந்த அரசாங்கம் எதிர் மறையான கருத்துக்களை விதைத்திருந்தார்கள்.
எனவே எதிர் காலத்தில் சிவில் அமைப்புக்களும், ஊடகவியலாளர்களும், இணைந்து ஒரு கட்டமைக்கப்பட்ட பரிந்துரைகளைத் தெரிவித்தால் அவை மிகவும் வரவேற்புக்களைப் பெறும், எனத் தெரிவித்தார்.
ரெயின்போ நிறுவனமும், யுத்தம் மற்றும், சமாதானம் தொடர்பாக அறிக்கையிடும், நிறுவனமும், இணைந்து ஏற்பாடு செய்திருந்த இச்செயலமர்வில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, மற்றும், வவுனியா அகிய மாவட்டங்களில் சேவை செய்கின்ற தெரிவு செய்யப்பட்ட அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளும், மேற்படி மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களும், இதில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது ரெயின்போ நிறுவனத்தின் ஆலோசகர் முகமட் ராய்ஸ், யுத்தம், மற்றும், சமாதானம் தொடர்பாக அறிக்கையிடும் நிறுவனத்தின் இலங்கைக்கான முகாமையாளர் சட்டத்தரணி முகமட் அசாட், ஆகியோரும் கலந்து கொண்டு கருத்துக்களை வளங்கினர்.
0 Comments:
Post a Comment