மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பொங்கல் விழா வெள்ளிக்கிழமை (29) அலுவலக முன்றலில் மிக பிரமாண்டமான முறையில் இடம் பெற்றது. இன் நிகழ்வு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரதேச செயலாளர் கலாநிதி மூ.கோபாலரெத்திம் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
இன் நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கலைக் கழகங்கள் விளையாட்டுக் கழகங்கள் என்பனவும் இவ் பொங்கல் விழாவில் பங்கு பற்றியிருந்தன. இதன் போது தேற்றாத்தீவு தேனுகா கலைக்கழகத்தின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றமையும் குறிப்பிடத் தக்கதாகும்
0 Comments:
Post a Comment