(ஏஎம் றிகாஸ்)
ஏறாவூர் - வந்தாறுமூலை பிரதேசத்தில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் கைக்குழந்தை உட்பட ஆறுபேர் படுகாமடைந்துள்ளர்.
வாழைச்சேனையிலிருந்து ஏறாவூர் நோக்கி சென்றுகொண்டிருந்த இம்முச்சக்கர வண்டி பாதையைவிட்டு விலகி வீதியின் வலதுபுறமாகவுள்ள மதகு ஒன்றினுள் குடைசாந்து வீழ்ந்துள்ளது.
இவர்கள் மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலை, வாழைச்சேனை ஆதார வைத்திசாலை மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
56 வயதுடைய ச.மகாதேவன், கே.பரதன், கே.யாழினி,ஐ.ரஞ்கினி,கே.அனுஷ்கன் மற்றும் ஒருவயதுடைய பீ.காருனி ஆகியோரே இவ்விபத்தில் காயமடைந்தவர்கள்.
ஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
0 Comments:
Post a Comment