சிதறிக் கிடக்கும் சக்தியைத் திரட்டிச் சேர்ப்பதில் வல்லவர்களே! செவ்வாய்
லாப வீட்டில் பலம் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு
பிறப்பதால் உங்களின் மனோபலம் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் உள்ள திறமைகளை
இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை
நிறைவேற்றுவீர்கள். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சொத்து வாங்க
முன்பணம் தருவீர்கள். புதிய பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை
செய்யப்படும். ஏழரைச் சனி இருப்பதால் உங்களின் நெருங்கிய நண்பர்களைப்
புதியவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டாம். திடீர் சிநேகிதர்களை
வீட்டிற்குள் அழைத்துவர வேண்டாம். வாகனத்தைச் சீர்செய்வீர்கள்.
ராசிக்குள்ளேயே சூரியனும், புதனும் நிற்பதால் வி.ஐ.பி.-களின் உதவியுடன் சில
காரியங்களை விரைந்து முடிப்பீர்கள்.
நவீன ரக மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். புத்தாண்டின் தொடக்கம்
முதல் 07.02.2016 வரை அதிசாரத்தில் மற்றும் 02.08.2016 முதல் வருடம்
முடியும் வரை குரு பகவான் 10-ம் வீட்டில் நிற்பதால் இடைவிடாமல் உழைத்தும்
கையில் எதுவும் தங்கவில்லையே என்ற ஏக்கம் வந்து போகும். சிறிய ஏமாற்றங்கள்,
எதிலும் ஈடுபாடற்ற நிலை வரும். வீட்டில் வர்ணம் பூசுவது,
விரிவுபடுத்துவது, கழிவு நீர், குடிநீர் குழாய் அடைப்பு போன்ற பராமரிப்புச்
செலவுகள் அதிகமாகும். ஆனால் 08.02.2016 முதல் 01.08.2016 வரை குரு உங்கள்
ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்வதால் அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள்.
கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். மனைவி வழியில் செல்வாக்கு
உயரும். 8.01.2016 முதல் ராகு பகவான் 9-ம் வீட்டிலும், கேது 3-ம்
வீட்டிலும் அமர்வதால் எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடிவடையும்.
தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும்.
பாகப்பிரிவினைப் பிரச்சினையில் தலையிட வேண்டாம். இளைய சகோதர வகையில்
ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த தங்க ஆபரணம், ரத்தினங்கள் வாங்குவீர்கள்.
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். 27.02.2016 முதல் 09.09.2016 வரை உங்களின்
பூர்வ புண்யாதிபதி செவ்வாய் சனியுடன் சேர்ந்து நிற்பதால் பிள்ளைகளால்
செலவு, அலைச்சல், சிறுசிறு அவமானங்கள் வந்து நீங்கும். குடும்பத்தினர்
அனைவரும் வெளியூர் செல்வதாக இருந்தால் நகை, பணத்தையெல்லாம் வங்கி லாக்கரில்
வைத்துவிட்டுச் செல்வது நல்லது. வியாபாரம் சூடுபிடிக்கும். அனுபவமிக்க
வேலையாட்கள் திடீரென்று பணியை விட்டு விலகுவார்கள். பழைய நிறுவனங்களைக்
காட்டிலும் புதிய நிறுவனங்களின் பொருட்களை விற்பதால் ஆதாயமடைவீர்கள்.
மேலதிகாரிகளிடம் பணிந்துபோங்கள். எதிர்பார்த்த இடமாற்றம், சம்பளம் சற்று
தாமதமாகிக் கிடைக்கும். இந்தப் புத்தாண்டு விவேகமான முடிவுகளால் வெற்றி பெற
வைக்கும்.
0 Comments:
Post a Comment