15 Jan 2016

பழுகாமத்தில் இடம்பெற்ற தரம் 01 மாணவர்களின் வரவேற்பு நிகழ்வு

SHARE
(பழுவூரான்)

போரதீவுப் பற்று கல்விக் கோட்டத்திற்குட்பட்ட திருப்பழுகாமம் விபுலானந்தா வித்தியாலயத்தில் 14.02.2016 அன்று சம்பிரதாயபூர்வமாக தரம் 01 மாணவர்களினை வரவேற்பு நிகழ்வு வித்தியாலய அதிபரின் தலைமையில் இடம்பெற்றது.

தரம் 02 மாணவர்களினால் தரம் 01 மாணவர்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு பாண்ட்டு வாத்திய இசை முழங்க வரவேற்று பாடசாலையினுள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்நிகழ்வுக்கு போரதீவுப்பற்று கோட்டக்கல்விப்பணிப்பாளர் பூ.பாலச்சந்திரன் அவர்களும், ஆசிரிய ஆலோசகர்களான திருமதி.ர.நவரெத்தினராஜா மற்றும் திருமதி.டே.இராஜகுமாரன் அவர்களும் கண்டுமணி மகா வித்தியாலய அதிபர் திரு.சு.உதயகுமார் அவர்களும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர். இதன்போது பொங்கல் விழா இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
















SHARE

Author: verified_user

0 Comments: