சுனாமி அனர்தம் ஏற்பட்டு 11 வது ஆண்டு நினைவு தினம் இன்று சனிக்கிழமை (26) பரவராக நாடெங்கிலும் இடம்பெற்றுவரும் இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி கடற்கரையில் அமைந்துள்ள சுனாமி நினைவுத் தூபியில் நினைவு தினம் அனுஸ்ட்டிக்கப்பட்டது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி.எம்.கோபாலரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு ஐக்கிய கிராம சேவை உத்தியோகஸ்தர்க சங்கத் தலைவர் எஸ்.ஞானசிறி, களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி என்.ரீ.அபூபக்கர், களுவாஞ்சிகுடி கிராமத் தலைவர் அ.கந்தவேள் உட்பட பொதுமக்கள், பொலிசார், இராணுவத்தினரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது சுனாமியினால் உயிரிழந்த உறவுகளுக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி சுடர் ஏற்றப்பட்டு நினைவுப் பேருரைகளும் இடம்பெற்றன.
0 Comments:
Post a Comment