மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு – களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் திருவாதிரைத் தீர்த்தோற்சவம் இன்று சனிக்கிழமை காலை (26) களுதாவளைக் கடற்கரையில் நடைபெற்றது.
பிள்ளையார் மூசிக வாகனத்திலும், சிவன் பார்வதி சமேதராய் இடப வாகனத்திலும், முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராய் மயில் வாகனத்திலும், இன்று அதிகாலை உள்வீதி வெளிவீதி வலம் வந்தனர்.
பின்னர் களுதாவளைக் கடலில் ஆயிரக்கணக்கான பக்கதர்களின் அரோகரா ஓசையுடன் திருவாதிரை நட்சத்திரத்திதில் தீர்த்தம் இடம்பெற்றது.
0 Comments:
Post a Comment