30 Dec 2015

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் கொள்கை பரப்பு இணைப்பாளர்களுக்கு கண்டியில் வதிவிடச் செயலமர்வு

SHARE
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் கொள்கை பரப்பு இணைப்பாளர்களுக்கான இரண்டுநாள் வதிவிடச் செயலமர்வு கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இருதினங்களும் கண்டியில் நடைபெற்றது.
இதில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் 25 மாவட்டங்களிலுமுள்ள கிளைகளில் கொள்கை பரப்பு இணைப்பாளர்களாகக் கடமை புரியும் இணைப்பாளர்கள் கொண்டிருந்தனர்.

இதன்போது இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் கொள்கை பரப்புச் செயற்பாடுகளை மக்கள் மத்தியில் எவ்வாறு கொண்டு செல்வது, மாவட்டக் கிளைகளின் செயற்பாடுகளை மேலோங்கச் செய்வது தலைமைக் காரியாலயத்தின் ஒத்துழைப்புக்கள், போன்ற பல விளையங்கள் தொடர்பில் விளக்கமளிக்னகப்பட்டன.

இதன்போது இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் தேசிய உபதலைவரும், அம்பாறை மாவவட்டக் கிளையின் தலைவருமான சுனில் திசாநாயக்க, கம்பஹா மாவட்டக் கிளையின் தலைவர் அன்றன் விக்டோரியா, நிதி முகாமை மனித மற்றும், நேய விழுமியங்களுக்கான முகாமையாளர்  ரூலா டீ சில்வா, கொள்கை பரப்பு உதவி முகாமையாளர் தாரணி இரத்தனவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினர். 













SHARE

Author: verified_user

0 Comments: