25 Dec 2015

2016 ஆம் ஆண்டில் கிழக்கின் அபிவிருத்தியில் பாரிய திருப்பு முனை

SHARE

கிழக்கு மாகாணத்தில் வறுமை என்பது பாரிய சவாலாக உருவெடுத்துள்ளது . இதனை மாற்றி அமைப்பதுவே எனது சவாலாகவும் உள்ளது . இதற்காக பல்வேறு புதிய வேலைத்திட்டங்களை கிழக்கு மாகாணத்தில் உருவாக்கி வருகின்றேன் . இக்கிழக்கு மாகாணத்தில் இருந்து பணிப்பெண்களாக வெளிநாடு செல்லும் வீதத்தினை முற்றாக நிறுத்துவதற்கும் மற்றவர்களிடம் கையேந்தி நிற்கும் நிலையினையும் மாற்றியமைப்பதும்  வருங்காலங்களில்  கிழக்கு மாகாணம் முன்னேற்றமடைந்த மாகாணமாக மாறவேண்டும். கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பினால் நேற்று  ( 24) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஹில்மி அஹமட் லெப்பை தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலை மாணவ மாணவியர்களுக்கான பாடசாலை புத்தகப்பை வழங்கும் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு அம்மாணவர்களுக்கான பாடசாலை பைகளை வழங்கி வைத்து உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்..



பாரிய முதலீட்டாளர்களை இக்கிழக்கு மாகாணத்தில்  முதலீடுகளை மேற்கொள்ள வைப்பதற்காக பாரிய முதலீட்டு மாநாடு ஒன்றினை ஜனவரி மாதம் 28 ஆம் திகதி கொழும்பு கலதாரி ஹோட்டலில்  ஏற்பாடு செய்துள்ளேன் இதற்காக ஜனாதிபதி பிரதமர் உட்பட பல அமைச்சர்களும் 500 க்கு மேற்பட்ட வெளிநாட்டு முதலீட்டாளர்களும்  பங்கு கொள்ள உள்ளனர் . எனவே இதன் மூலம் அடுத்த ஆண்டில் கிழக்கின் அபிவிருத்தியில் பாரிய திருப்பு முனையை பெற்று வறுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமென நான் எதிர்பார்க்கின்றேன் . 

இதன்  மூலம் ஒவ்வொரு உள்ளூராட்சி சபைகளுக்குமாக  கைத்தொழில் பேட்டைகளை அமைத்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்  யுவதிகளுக்கான வேலை வாய்ப்பினை உருவாக்கி கொடுத்து வேலையில்லா திண்டாட்டத்துக்கு சிறந்த தீர்வினை பெற்றுக்கொள்ள முடியுமென முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவரது உரையின் மூலம் தெரிவித்தார் .




SHARE

Author: verified_user

0 Comments: