9 Nov 2015

களுவாஞ்சிகுடி பொது விளையாட்டு மைதானத்தில் பார்வையாளர் அரங்கு அமைப்பதற்கான அடிக்கல் நட்டுவைப்பு.

SHARE
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொது விளையாட்டு மைதானத்தில் பார்வையாளர் அரங்கினை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு கிராமத் தலைவர் அ.கந்தவேள் தலைமையில்  பொது விளையாட்டு மைதானத்தில் திங்கட் கிழமை (09) காலை நடைபெற்றது
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை(வெள்ளிமலை) பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் அதிகூடிய தொகையான எட்டு இலட்சம் ரூபாய் இதன் முதற்கட்ட பணிக்காக ஒதுக்கியுள்ளார்.

நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழங்கு மாகாண சபை உறுப்பினர்  முதல் கல்லினை நட்டு ஆரம்பித்து வைத்தார் பின்னர் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம், பிரதேச சபை செயலாளர் திருமதி.யா.வசந்தகுமாரி, மற்றும் களுவாஞ்சிகுடி கழகங்கள் சார்பான பிரதி நிதிகள், கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள், உடபட பலர் கலந்து கொண்டு அடிக்கல்லினை நட்டுவைத்தனர்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  இதன் போது கருத்துத் தெரிவிக்கையில்

அமையவுள்ள இந்த அரங்கிற்கான வேலைகளை மிகவும் துரிதமாகவும் திருப்தியாகவும் மேற்கொள்ள வேண்டும். இவ் அரங்கிற்கு தேவைப்படும், மீதிப்பணத்தினை அடுத்தவருடம் ஒதுக்கித் தருவதற்கான ஏற்பாடுகளைச் செய்வேன். இதனை பூரணமாக முடிப்பதற்கு கிரம மக்கள் அனைவரும் ஒத்தளைப்ப வழங்கவேண்டும். எனத் தெரிவித்தார.





SHARE

Author: verified_user

0 Comments: