9 Nov 2015

இலங்கை மனித உரிமை அமைப்பின் மட்டக்களப்பு மாவட்டக் காரியாலயம் திறந்து வைப்பு.

SHARE
இலங்கை மனித உரிமை அமைப்பின் மட்டக்களப்பு மாவட்டக் காரியாலயம் ஞாயிற்றுக் கிழமை (08) களுவாஞ்சிகுடியில்  திறந்து வைக்கப்பட்டது
மனித உரிமை அமைப்பிற்கான மாவட்ட இளைஞர் இணைப்பாளர் ரி.நிறோஜன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மனித உரிமை அமைப்பின் இலங்கை;கான பணிப்பாளர் நாயகம் கலாநிதி எம்.என்.எம்.அசீல், அம்பாரை மாவட்ட இணைப்பாளர் ஏ.ஜீ.அசீம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு திறந்துவைத்தனர்.

மாவட்டத்தில்  பொதுமக்களுக்கு ஏற்படும் மணித உரிமை மீறல்களை இனங்கண்டு அவற்றிற்கு சாட்ட ரீதியான தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்காகவே இந்த காரியாலயம் திறந்துவைக்கப்பட்டுள்ளதாக இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.




SHARE

Author: verified_user

0 Comments: