மட்/சிவானந்தா தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு கடந்த சனிக்கிழமை (14) பாடசாலையின் அதிபர் எஸ். மனோராஜ் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாருமாகிய துரைராசசிங்கம், கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் பாஸ்கரன், மட்டக்களப்பு கோட்டைக் கல்வி அதிகாரி சுகுமார், ஆகியோருடன் அவுஸ்திரேலிய பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள், பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது அதிதிகள் பாண்ட் வாத்திய நிகழ்வுகளுடன் அழைத்து வரப்பட்டனர். மாணவர்களின் கலை நிகழ்வுகள் பல இடம்பெற்றதுடன் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் அணிவிக்கும் நிகழ்வும், இடம்பெற்றது.

அத்துடன் சாதாரண தரம் உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்தலும், பாடசாலை சிறந்த மாணவனுக்கு கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment