27 Nov 2015

களுவாஞ்சிகுடி நகர்ப் பகுதியில் கட்டாக்காலியாகத் திரிந்த 25 மாடுகள் பிடிக்கப்பட்டன.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட களுவாஞ்சிகுடி நகர்ப் பகுதியில், கட்டாக்காலியாக வீதிகளில் திரியும் மாடுகளால் ஏற்படும் வீதி விபத்துக்களைக் குறைக்கும் முகமாக இப்பிரதேசத்தில் கட்டாக் காலியாகத் திரியும் மாடுகளைப் பிடிக்கும் நடவடிக்கை வியாழக் கிழமை இரவு (26) முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது இப்பிரதேசத்தில் கட்டாக் காகலியாக நடமாடிய  25 மாடுகள் பிடிக்கப்பட்டு களுவாஞ்சிகுடி பொலிசாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாகவும், பிடிக்கப்பட்டுள்ள மாடுகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிசாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி.எம்.கோபாலரெத்தினம் தெரிவித்தார்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி. எம்.கோபாலரெத்தினம் தலைமையில் முன்நெடுக்கப்பட்ட இந்நிகழ்வில், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் செயலாளர் திருமதி.யா.வசந்தகுமாரன், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சரத் நந்தலால், மற்றும் கிராம சேவை உத்தியோகஸ்தர்கள், பொதுமக்கள், என பலரும் இணைந்திருந்தனர்.









SHARE

Author: verified_user

0 Comments: