மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த காலங்களைப் போன்று குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன.
கடந்த இரு தினங்களில் இரண்டு படுகொலைகள் உட்பட நான்கு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த திங்கட்கிழமை மாவடிவேம்பில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதுடன், அன்று மாலை திராய்மடுவில் பாழடைந்த கிணற்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.
அதற்கு அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை வவுணதீவில் 8 வயது சிறுவன் ஒருவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதுடன், 30 வயது நபரொருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
இதேவேளை, களுவாஞ்சிக்குடியில் மிளகாய்த்தூளை வீசி பெண்ணின் கழுத்திலிருந்த 6.5 பவுண் தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்றுள்ளனர்.
ஏறாவூரில் சில கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், மட்டக்களப்பு நகரில் வீடுடைப்பு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இந்த மாவட்டத்தில் நாளுக்கு நாள் குற்றச்செயல்களும் சட்டவிரோத நடவடிக்கைககளும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Comments:
Post a Comment