25 Sept 2015

அறுக்கப்பட்ட மாடுகளின் சாணம் அடங்கிய கழிவுகள் குழத்தில் கொட்டப்பட்டதால் பொதுமக்கள் - பொலிஸாருக்கிடையில் முறுகல்

SHARE
நற்பிட்டிமுனையில் உழ்கிய்யா கொடுப்பதற்காக அறுக்கப்பட்ட மாடுகளின் சாணம் அடங்கிய கழிவுகள் கிராமத்தின் எல்லையிலுள்ள குழத்தில் கொட்டப்பட்டதால் பொதுமக்கள் - பொலிஸாருக்கிடையில் (25.09.2015) இன்று முறுகல் ஏற்பட்டது.
பொதுமக்கள் கல்முனை பொலிஸாருக்கு கொடுத்த தகவலையடுத்து இஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் கடமையை செய்ய முற்பட்ட போது கழிவுகளை கொட்டிய தரப்பினலுக்கும் பொலிஸாருக்குமிடையில் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.

மாகாணசபை உறுப்பினர் எம்.ராஜஸ்வன், பள்ளிவாசல் நிருவாகத்தினாரும் இதன்போது அங்கு சமூகமளித்திருந்தனர். பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படாத நிலையில், அங்கு வருகைதந்த கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டப்ளியு.ஹப்பார் கூடியிருந்தவர்களை பார்த்து பொலிஸாரின் கடமைக்கு இடையூறாக செயற்பட்டவர்கள் யாராக இருந்தாலும் நான் கைதுசெய்வேன். எம்மிடமுள்ள வீடியோ, போட்டோ ஆதாரங்களை கொண்டு பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த அனைவரையும் இன, மதம் பாராது கைதுசெய்து நீதிமன்றத்தில் ஒப்படைப்போம் எனத்தெரிவித்தார்.

அறுப்பதற்கு அனுமதியளித்தவர்கள் அதன் கழிவுகளின் முகாமைத்துவம் தொடர்பில் கவனமெடுத்து சரியான வழிகாட்டல்கள் செய்திருக்க வேண்டும்.
கழிவுகளை கெட்டுவதற்கோ அல்லது முகைமை செய்வதற்கோ பொதுமக்களுக்கு பொருத்தமான செயல் வழிமுறைகளை கல்முனை மாநகர சபை அறிவித்திருக்க வேண்டும். பொதுமக்களும் மாற்று சமூகத்தவர்களுக்கு இடையூறுகள் இல்லாமல் சமூகமுரன்பாடுகள் வளர்வதற்கான அடிப்படைகளை உருவாக்காமல் நடந்து கொள்வது காலத்தின் கட்டாயமாகும். (தெடர்ந்தும் அவதானத்துடன் எழுவான் செய்திகள்)





SHARE

Author: verified_user

0 Comments: