மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மங்கிக்கட்டுப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 10,000 ரூபாய் பணம், சுமார் 96,900 ரூபாய் பெறுமதியான தங்கநகைகள், இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை (02) இரவு திருட்டுப் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள வவுணதீவுப் பொலிஸார், திருட்டில் ஈடுபட்டவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment