21 Aug 2015

பைசால் காசிமுக்கு அமைச்சுப் பதவி அல்லது பிரதியமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும்

SHARE

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மூன்றாவது முறையாகவும் வெற்றியினைப் பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமுக்கு அமைச்சுப் பதவி அல்லது பிரதியமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டுமென நிந்தவூரில் காணப்படும் சமூக அமைப்புக்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்கள் உள்ளிட்ட ஏனைய அமைப்புக்கள் இணைந்து ஊடக அறிக்கையினை வெளியிட்டு அதனை மு.கா தலைவரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளது.

அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 
மு.கா சார்பாக கடந்த இரண்டு முறை நாடாளுமன்றம் தெரிவான போதும் எந்தவகையிலும் சோரம் போகாமல் கட்சிக்கும் அதன் தலைமைக்கும் கட்டுப்பட்டு இறுதி நேரம்வரை விசுவாசமாகச் செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மீண்டும் ஒரு தேர்தலில் வரலாற்று வெற்றி பெற்று இம்மாவட்ட மக்களின் ஏகோபித்த ஆணையைப் பெற்றுள்ளார்
.  
இந்த வெற்றியின் மூலம் மக்கள் அவர் மீது கொண்ட நன்மதிப்பைக் காட்டுவதோடு இம்மக்களைக் கௌரவப்படுத்த மு.கா தலைமையினால் பைசால் காசிமுக்கு  அமைச்சுப்பதவி அல்லது பிரதியமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டுமென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: