கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை காத்தான்குடி பொலிசார் இன்று (02) காலை கைதுசெய்துள்ளனர்.
மேலும் இவர்கள் வசமிருந்து கொள்ளையிடப்பட்ட முப்ப தரைப் பவுன் (30 1/2) தங்க நகைகள், ஐந்து இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பணம், என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன் இவர்கள் கொள்ளையிட்ட இரண்டு கையடக்கத் தொலைபேசிகளையும் வாவியில் வீசி விட்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் காத்தான்குடி பொலிசார் சுட்டிக்காட்டினர்.
கைதுசெய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் காத்தான்குடி முதலாம் குறிச்சியைச் சேர்ந்தவர்கள் எனவும் காத்தான்குடி பொலிசார் மேலும் குறிப்பிட்டனர்.
இவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment