24 Aug 2015

சுகாதார அமைச்சு அதிகாரிகள் குழு மட்டக்களப்புக்கு விஜயம்

SHARE

சுகாதார அமைச்சு அதிகாரிகள் குழு நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் ஆரோக்கிய நட்பு நிலையம் மற்றும் இருதய கிளினிக்கின் செயற்பாடுகளையும் பார்வையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது,  ஆரோக்கிய நட்பு நிலையத்தினதும் மற்றும் இருதய கிளினிக் பிரிவினதும் குறைநிறைகளையும் இவர்கள் கேட்டறிந்துகொண்டனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி பி.ஜி.மஹிபால தலைமையிலான குழுவினருடனான சந்திப்பில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.முருகானந்தம், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.சதுர்முகம் உள்ளிட்ட சுகாதார அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

SHARE

Author: verified_user

0 Comments: