24 Aug 2015

காணாமற்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் மூன்றாம் நாள் இன்று

SHARE

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மூன்றாம் கட்ட அமர்வின் மூன்றாம் நாள் இன்று திங்கட்கிழமை இடம்பெறுகின்றது.
இன்றைய அமர்வில் 255 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டப்ளியூ.குணதாச தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இன்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து கிடைக்கப்பெற்றுள்ள 1,081 முறைப்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழு சாட்சி விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.
இதேவேளை, கடந்த இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட சாட்சி விசாரணைகளின் போது அழைப்பு விடுக்கப்பட்டவர்களில் 357 பேர் சாட்சியமளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மூன்றாம் கட்ட சாட்சி பதிவுகள்
நாளை செவ்வாய்க்கிழமை நிறைவடையும் என ஆணைக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.
SHARE

Author: verified_user

0 Comments: