திருகோணமலை சம்பூரில் மீள்குடியேற்றப்பட்ட மக்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து கலந்துரையாடி வருகின்றார்.
திருகோணமலை சம்பூரில் உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்கி வைக்கும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்று வரும் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமி நாதன், அமைச்சர் ஹக்கீம், மத்திய மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
0 Comments:
Post a Comment