25 Aug 2015

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் கைது செய்யப்பட்டுள்ளார்.

SHARE

காத்தான்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை இடம் பெற்ற கலவரம் தொடர்பாக கிடைக்கப்பெற்றிருந்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அவரை தாம் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னரும் இச்சம்பவம் தொடர்பாக வேறு நபர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரக் காலகட்டத்தில் தேர்தல் அதிகாரிகளை தாக்க முற்பட்ட சம்பவம் தொடர்பாகவும் இதே பரீட் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார்.
கடந்த 2010ம் ஆண்டு தொடக்கம் 2013ம் ஆண்டுவரை இவர் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
SHARE

Author: verified_user

0 Comments: